Monday, August 22, 2011

மரண வேட்டை ( FINAL DESTINATION 5) விமர்சனம்

 நேற்று சென்னை ராக்கி theatre இல் இந்த படத்தை பார்த்தேன் , ( சீட் தான் சரி இல்ல ). மற்ற theatre இல் கொடுபதை போல் இல்லாமல் வித்தியாசமான 3D  கண்ணாடி கொடுத்தார்கள் . 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பாக்க வேண்டிய படம் ஆனால் theatre இல் பல சின்ன குழந்தை களை பாக்க முடிந்தது


படத்தை பற்றி ...

 ஹீரோ வும் நண்பர்களும்  சேர்ந்து பஸ் இல் ஒரு பாலத்தின் மேல் போகும்போது , அது இடிந்து எல்லோரும் சாவது போல் கனவு வருகிறது ஹீரோவுக்கு உடனே ஹீரோ அவன் நண்பர்களை எச்சரித்து அவர்களோடு தப்பிக்கிறான் . அவனோடு வந்த கொஞ்சம் பேர் மட்டும் இறகிறார்கள்

 இறந்தவர்களுடைய அமைதி கூட்டத்தில் ஒருவன் ஹீரோ வை பார்த்து இனிமேல் தான் ஒவொருவராக இறக்க போகிறீர்கள் என சொல்லுகிறான் , அங்கே தான் சூடு பிடிகிறது படம் 

அதன் பின்  ஒவொருவராக எப்படி இறகிறர்கள் என்பதை மிரட்சி உடன் சொல்லி இருகிறார்கள் 

முதலில் பாலம் இடிந்து எல்லோரும் சாகும் காட்சியே பயங்கரம் , கண்டிப்பாக 3d இல் மட்டுமே பாக்க வேண்டிய படம்

 முதல் சாவு ஒரு ஜிம்னாஸ்டிக் பயிற்சி இல் ஆரம்பிகிறது , ஒரு screw  வினால் எப்படி சாவு நடக்க முடியும் என்று நினைக்கலாம் , ஆனால் ஒருscrew  வினால் ஹீரோ வின் friend இன் காதலி இறந்துபோகிறாள் அதுவும் மிக கொடூரமாக .

இரண்டாவது சாவு ஒரு மசாஜ் சென்டரில் நடக்கிறது , யாரும் எதிர்பாக்கத சாவு அது, ஹீரோ வின் இன்னொரு நண்பன் , சரியான  play பாய் .தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட படத்தில் எப்படி சாகிறான் என்று காட்ட வில்லை. அங்கும் ஹீரோ வும் அவன் நண்பர்களும் ஏற்கனவே இறந்தவர்களுடைய அமைதி கூட்டத்தில் பார்த்த நபரை பார்க்கின்றனர் , அவனிடம் அதை பட்டி கேக்கும் போது அடுத்தவர்களின் ஆயுசில் நீங்கள் வாழ்கிறீர்கள்  என சொல்லுகிறான் அதாவது பாலம் இடிந்து சாகாமல் அதில் இறந்தவர்களின் ஆயுசில் நீங்கள் வாழ்கிறீர்கள் என சொல்லுகிறான்.

அடுத்தது ஹீரோவின் negro நண்பனுக்கு வரவேண்டிய சாவு அவனோடு வேலை செய்யும் மற்றும்   அவனோடு எப்போதும் சண்டை போடுகிற இனொருவனுக்கு நடக்கிறது. அப்போது அவனுக்கு வந்த சாவை வென்று விட்டான் என நினைக்கிறார்கள்.

இன்னொரு சாவு கண் சரியாக திரியாத ஹீரோ வோடு வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கு லேசர் ஆபரேஷன் நடக்கும் போது அந்த ஹோச்பிடல் மேலிர்ந்து கீழே விழுந்து சாகிறாள் , அதிலும் அவள் கண் தனியே விழ அதன் மேல் ஒரு காரின் டயர் ஏறி நசுங்கும் காட்சி.. நெஞ்சம் உறையும் காட்சி

இனி இருப்பது மூன்றே பேர் , ஹீரோ, அவன் friend மற்றும் ஹீரோ வின் காதலி. ஹீரோ வின்  friend தன் சாவை தடுக்க ஹீரோ வின் காதலியை கொல்ல வரும்போது நடக்கும் சண்டை இல் ஹீரோ அவன்  friend ஐ கொல்லுகிறான்.

அதோடு படம் முடியும் னு பாத்த அப்புறம் தான் கிளைமாக்ஸ் யே. ஹீரோவும் அவன் காதலி இருவரும் பாரிஸ் செல்லும் விமானம் வெடித்து இருவரும் இறகிறர்கள், கடைசில் அந்த negro  நண்பனும் இறக்கிறான் 

பாலம் இடிந்து எல்லோரும் சாகும் காட்சி போலவே விமானம் வெடித்து எல்லாரும் சாகும் காட்சி உம சான்ஸ் யே இல்ல..

கண்டிப்பா பாக்க வேண்டிய படம்




















 

Sunday, August 21, 2011

ஊழலுக்கு எதிரான போராட்டம் ...

அன்னா ஹசாரே போன்றவர்களால் மட்டுமே சாத்தியமான ஒன்றல்ல இது , நம் ஒவருவரும் நினைத்தாள் மட்டுமே முடியும் ஒன்று .


நமீல் எத்தனை பேர் லஞ்சம் கொடுக்காமல் எந்த அரசு அலுவலகத்தில் காரியம் சாதிக்கிறோம் சொல்லுங்கள் பாக்கலாம், முதலில் நம் லஞ்சம் கொடுக்காமல் தவிர்திருந்தால் அவர்களும் வாங்காமல் இருந்திருப்பார்கள்



மீனவர்கள் மீது தாக்குதல்...

இலங்கை அரசுக்கு எதிராக நம் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது முதல் நம் மீனவர்களு கஷ்ட களம் தான் போல ,
 நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேர் வெள்ளிக்கிழமை இரவு நடுக்கடலில், இலங்கை மீனவர்களால் தாக்கப்பட்டனர். இதில் 3 பேர் கத்தியால் குத்தப்பட்டனர்.
 
அரசு உடனே நடவடிக்கை எடுக்கனும் ...
 
 
கடலுக்குள் காற்றாலை...
 
காற்றாலை மின் பண்ணை ஒன்றை கடலுக்குள் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே எங்க ஊரு பக்கம் ( பணகுடி , அஞ்சு கிராமம் ..) இங்கை எடுக்கிற மின்சாரம் எல்லாம் எங்க போகுதோ..
 
 
ஊழலுக்கு எதிரான போரரட்டம் நம்ம சென்னையில்...
 
அன்னா ஹசாரே க்கு ஆதரவாக நம்ம சென்னையில் திருவான்மியூரில், கடந்த 16ம் தேதி முதல், 36 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்
 
இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், ஐ.டி., ஊழியர்கள், பொது மக்கள் உள்ளிட்ட, அனைவரும் கலந்து கொண்டனர்.
இத பாக்கும் போது சீக்கிரம் நம்ம பிரதமர் நல்ல முடிவா எடுப்பார்னு நம்புறேன் ..

Friday, August 19, 2011

தொடக்கம் ...

நண்பர்களே !

இந்த வலை உலகில் பல்வேறு வலை பூக்கள் இருந்தாலும் , என்னுடைய இந்த ப்ளாக் ஆனது முற்றிலும் மாறுபட்ட ஒன்றக இருக்கும் என நம்புகிறேன்

தினம் தோறும் மாறுபட்ட தகவல்களை தருவேன் என நம்புகிறேன்


உங்கள்
நாஞ்சில் ராஜா